search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து அமைப்பினர்"

    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
    • ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் வருடந்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம். அதன்படி காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் தெரிவித்து இருந்தது. இதையொட்டி நகரில் உள்ள ராஜாஜி பூங்கா, சுந்தரம் பார்க், நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை தொண்டர்களுடன் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கம்-பண்பாட்டுக்கு காதலர் தினம் எதிரானது. எனவே அதனை இளைஞர்கள் கொண்டாடக்கூடாது. புல்வாமா தாக்குதலை நினைவு கூறும் வகையில் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

    காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி இன்று காலை ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்திருந்த புதுமண தம்பதிகளுக்கு இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஒரே இடத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஆதரித்து இனிப்பும் வழங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
    • நேற்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பிரதான சாலை மார்க்கெட் அருகே கழிவு நீர்நீர்வரத்து ஓடையின் மேல்புறம் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனை அகற்ற வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஓடை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.இதற்கிடையே பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வணிக வைசிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது பாலத்தை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் தாசில்தார் சுசிலா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், சிவசுப்பு, இன்ஸ்பெக்டர்கள் சுகாதேவி, பத்மாவதி உட்பட போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.

    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல பாலம் இல்லாததால் கழிவு நீர் ஓடையில் இறங்கி சுவாமி, அம்பாளை வழிபட்டனர். இதில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர்.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை பஸ் நிலையம் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இவற்றிற்கு போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாளை பஸ் நிலைய பகுதியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடனே அங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் புத்தகங்களை வினியோகிக்க கூடாது என்றனர். எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரிசல் சுரேஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே பாளை வ.உ.சி மைதானம் இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகிகள் விமல், பிரம்ம நாயகம் தலைமையில் அமைப்பினரும் திருமாவளவன் குறித்து துண்டு பிரசுரங்களுடன் திரண்டனர்.

    அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×